தேவையான பொருட்கள்:
பூண்டு – 1 பல் (பொடியாக நறுக்கியது)
சீரகம் – 1 டீஸ்பூன்
கோதுமை மாவு – 1/2 கப்
கொத்தமல்லி – சிறிதளவு (பொடியாக நறுக்கியது)
அரைக்க:
இஞ்சி – சிறிய துண்டு
ரவை – 1/4 கப்
மீல் மேக்கர் – 1 கப்
தண்ணீர் – தேவையான அளவு
உப்பு – ருசிக்கேற்ப
செய்முறை:
முதலில் மீல் மேக்கரை கொதிக்கும் நீரில் போட்டு 5 நிமிடம் மூடி வைக்கவும். 5 நிமிடங்களுக்குப் பிறகு தண்ணீரை முழுவதுமாக வடிகட்டி, மீல் மேக்கரில் உள்ள அதிகப்படியான தண்ணீரை பிழிந்து விடவும். பிறகு ஒரு மிக்சி ஜாரில் மீல் மேக்கர், 1 துண்டு இஞ்சி, ரவை 1/4 கப், தேவையான உப்பு சேர்க்கவும். மேலும் சிறிது தண்ணீர் சேர்த்து நன்றாக அரைக்கவும். பிறகு அரைத்து வைத்துள்ள கலவையை ஒரு பாத்திரத்தில் ஊற்றி, அதில் கோதுமை மாவு, பூண்டு, சீரகம், கொத்தமல்லி, தோசை மாவு சேர்க்கவும். பதத்திற்கு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்கு கலக்கவும். கடைசியாக தோசைக்கல்லை அடுப்பில் வைத்து, கல் சூடானதும், கலந்து வைத்திருக்கும் மாவை ரவா தோசை போல் ஊற்றி, எண்ணெய் ஊற்றி பொன்னிறமாக வேக வைத்தால், சுவையான மீல்மேக்கர் தோசை ரெடி.