புதுடெல்லி: சிஎன்பிசி குளோபல் லீடர்ஷிப் மாநாட்டில் அவர் பேசினார். அப்போது அவர் பேசுகையில், “தேசத்தின் முன்னேற்றத்திற்கு கடுமையாக உழைக்க வேண்டியது அவசியம். அந்த அயராத உழைப்புக்கு உதாரணம் பிரதமர் மோடி. நாட்டில் வலுவான பணி நெறிமுறை இல்லாமல், வளர்ச்சியில் உலகத்துடன் போட்டியிட முடியாது. இந்தியாவின் வளர்ச்சி நமது முயற்சியில் உள்ளது” என்றார்.
அவர் தனது பணி அனுபவத்தின் போது ஒரு நாளைக்கு 14 மணி நேரம் வரை வேலை செய்ததை நினைவு கூர்ந்தார். 1986-ம் ஆண்டில், ஐந்து நாள் வேலை வாரத்திற்கு மாற்றப்பட்டது அவருக்கு ஏமாற்றத்தை அளித்தது, என்றார். மேலும், 6 நாள் வேலை வாரம் அவசியம் என்று அவர் உறுதியாக நம்புகிறார். அந்த கருத்தை தனது கல்லறைக்கு கொண்டு செல்வேன் என்றும், அதை ஒருபோதும் மாற்ற மாட்டேன் என்றும் அவர் கூறினார்.
கடந்த ஆண்டு நாராயண மூர்த்தி வேலை நேரம் குறித்து கூறிய கருத்து பரபரப்பை ஏற்படுத்தியது. “நாம் தொழிலாளர் உற்பத்தியை மேம்படுத்தாத வரை, ஊழலைக் குறைக்கும் வரை, ஆளும் வர்க்கத்தின் தாமதத்தைக் குறைக்கும் வரை, வளர்ந்த நாடுகளுடன் போட்டியிட முடியாது. எனவே இளைஞர்கள் வாரத்தில் 70 மணி நேரம் உழைக்க வேண்டும் என்பதே எனது வேண்டுகோள். இந்தியா என் நாடு என்பதால் இதைச் சொல்கிறேன். இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு ஜப்பானிலும் ஜெர்மனியிலும் இதுதான் நடந்தது.
சில ஆண்டு காலங்கள் அனைத்து ஜெர்மனியர்களும் கூடுதல் நேரம் வேலை செய்வதை உறுதி செய்தன. கடினமாக உழைக்க நாம் மாற வேண்டும். அப்படி நடந்தால்தான் உலக அளவில் நமது நாடு பொருளாதார ரீதியாக முன்னேற முடியும். அந்த செயல்திறன் அங்கீகாரத்தையும், மரியாதையையும் அதிகாரத்தையும் தருகிறது. எனவே இந்நாட்டு இளைஞர்களுக்கு நான் கூறுவது அடுத்த 20-50 ஆண்டுகளுக்கு ஒரு நாளைக்கு 12 மணி நேரம் உழைக்க வேண்டும்.
அப்போதுதான் ஜிடிபியில் இந்தியா முதலிடமோ இரண்டாவதாகவோ இருக்க முடியும். இந்தியாவின் தொலைதூர கிராமத்தில் உள்ள ஒரு ஏழைக் குழந்தையின் எதிர்காலம் நம் இளைஞர்களின் தோள்களில் தங்கியுள்ளது. அந்த பொறுப்பை அவர்கள் உணர வேண்டும்” என்பது விவாதத்திற்குரிய விஷயம். இப்போது 6 நாள் வேலை பற்றி தீவிர கருத்தை கூறியுள்ளார்.