சென்னை: தெற்கு ரயில்வே சென்னை கோட்டம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:- தாம்பரம் யார்டு பராமரிப்பு பணி காரணமாக சென்னை கடற்கரை – தாம்பரம் மார்க்கத்தில் நாளை (17-ம் தேதி) காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சார ரயில் சேவை ரத்து செய்யப்படுகிறது.
இருப்பினும் பயணிகளின் வசதிக்காக காலை 6.15 மணி முதல் மாலை 4.10 மணி வரை அரை மணி நேரம் முதல் ஒரு மணி நேரம் வரை சிறப்பு ரயில்கள் இயக்கப்படும். அதே நேரத்தில், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருமால்பூர், அரக்கோணம் ஆகிய பகுதிகளுக்கு ரயில்கள் வழக்கம் போல் இயக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.