சென்னை: “மிகப்பெரிய 30 ஆண்டுகளில் நுழைவதை நாங்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்தோம். ஆனால் எல்லா விஷயங்களும் எதிர்பாராத முடிவைக் கொண்டிருக்கின்றன. கடவுளின் சிம்மாசனம் கூட உடைந்த இதயங்களின் எடையின் கீழ் நடுங்கலாம். இந்த சிதறலில், உடைந்த துண்டுகள் மீண்டும் தங்கள் இடத்தைக் கண்டுபிடிக்காதபோதும், நாங்கள் அர்த்தத்தைத் தேடுகிறோம்.
இந்த பலவீனமான அத்தியாயத்தை நாங்கள் கடந்து செல்லும்போது எங்கள் நண்பர்களே, எங்கள் தனிப்பட்ட வாழ்க்கைக்கான உங்கள் கருணை மற்றும் மரியாதைக்கு நன்றி,” என்று ஏஆர் ரஹ்மான் கூறினார். முன்னதாக, சாய்ரா பானுவின் வழக்கறிஞர் வந்தனா ஷா வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:- திருமணமாகி பல வருடங்கள் ஆன நிலையில், கணவர் ஏ.ஆர்.ரஹ்மானை பிரியும் கடினமான முடிவை சாய்ரா எடுத்துள்ளார்.
அவர்களின் உறவில் குறிப்பிடத்தக்க உணர்ச்சி அழுத்தத்திற்குப் பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அவர்கள் ஒருவரையொருவர் ஆழமாக நேசித்தாலும், பதட்டங்களும் சிரமங்களும் அவர்களிடையே தீர்க்க முடியாத இடைவெளியை உருவாக்கியுள்ளன. இந்த நிலையில் இந்த பிளவை எந்த தரப்பினராலும் சரி செய்ய முடியவில்லை. வலி மற்றும் வேதனையிலும் இந்த முடிவை எடுத்ததாக சாய்ரா கூறியுள்ளார்.
சைரா தனது வாழ்க்கையில் இந்த கடினமான அத்தியாயத்தை கடந்து செல்லும் போது தனது தனியுரிமையை மதிக்குமாறு பொதுமக்களை கேட்டுக்கொள்கிறார்” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. ஏ.ஆர்.ரஹ்மான் – சாய்ரா பானு திருமணம் 1995-ல் நடந்தது. இவர்களுக்கு கதீஜா, ரஹீமா, அமீன் என மூன்று குழந்தைகள் உள்ளனர். தமிழ் சினிமாவில் பிரபலமான ஜோடிகளில் ஒன்றாக பார்க்கப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்-சாய்ரா பானுவின் இந்த விவாகரத்து முடிவு ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.