ஜார்ஜ் டவுன்: கயானா சுற்றுப்பயணத்தின் மூன்றாவது கட்டமாக பிரதமர் நரேந்திர மோடி கயானா சென்றடைந்தார். பிரதமருக்கு நாட்டு மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அந்நாட்டு அதிபர் முகமது இர்பான் அலியை சந்தித்து பல்வேறு முக்கிய விஷயங்கள் குறித்து விவாதித்தார். இந்தியா மற்றும் கயானா இடையேயான உறவை மேம்படுத்துவதில் இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும்.
கயானா மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் சங்கத்தின் ஒரு பகுதியாகும், மேலும் அதன் முன்னணி கிரிக்கெட் வீரர்கள் உலகம் முழுவதும் புகழ் பெற்றுள்ளனர். அணியின் முன்னாள் கேப்டன்களான கிளைவ் லாயிட், ஷிவ்நரைன் சந்திர பால், கார்ல் கூப்பர் போன்றோரின் பெயர்கள் அனைவரும் அறிந்ததே.
பிரதமர் மோடியின் கயானா பயணத்தின் போது, அந்நாட்டின் பிரபல கிரிக்கெட் வீரர்கள் அவரை சந்தித்து இந்தியாவில் தங்களின் அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர். இந்த சந்திப்பின் போது கிரிக்கெட் வீரர்கள் பிரதமருக்கு கிரிக்கெட் மட்டையை பரிசாக வழங்கினர். இந்தியா மற்றும் கயானா இடையிலான கிரிக்கெட் உறவை மேலும் வலுப்படுத்தும் வகையில் இந்த நிகழ்வு நடத்தப்பட்டது.
சந்திப்புக்குப் பிறகு பிரதமர் மோடி கூறியதாவது: இரு நாடுகளுக்கும் இடையிலான கிரிக்கெட் உறவு மிகவும் ஆழமானது மற்றும் முக்கியமானது. இது நமது நாடுகளுக்கு இடையேயான நெருங்கிய உறவுகள் மற்றும் கலாச்சார தொடர்புகளை பிரதிபலிக்கிறது.