காலிஸ்தானி பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் பிப்ரவரி 2023 இல் கனடாவில் கொல்லப்பட்டார். இந்த கொலை இந்தியாவுடன் தொடர்புடையது என்று கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கூறியிருந்தார். இது குறித்து அவர் இந்தியா மீது குற்றம் சாட்டியிருந்தார்.
இந்த சம்பவத்திற்கு பிறகு இருதரப்பு உறவுகளில் விரிசல் ஏற்பட்டது. இந்த கொலையில் பிரதமர் மோடி, வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆகியோருக்கும் தொடர்பு இருப்பதாக கனடாவின் முன்னணி நாளிதழான ‘தி குளோப் அண்ட் மெயில்’ செய்தி வெளியிட்டுள்ளது. இந்த செய்திக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்ததுடன், இது தவறானது என்றும் தெரிவித்துள்ளது.
இதனிடையே, இந்த செய்தி குறித்து பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த ட்ரூடோ, “இந்தத் தகவல் சில குற்றவாளிகளிடமிருந்து வந்ததாகத் தெரிகிறது. இது அரசின் ரகசிய விஷயமாக இருக்கலாம். விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளேன்” என்றார்.