சென்னை: அ.தி.மு.க., பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி நேற்று வெளியிட்ட அறிக்கை:- பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களுக்கு, தற்காலிகமாக நியமிக்கப்படுபவர்கள், பெற்றோர் சங்கம் மற்றும் முதல்வர் மூலம் நியமிக்கப்படுகின்றனர்.
10 மற்றும் பிளஸ் 2 வகுப்பு எழுதும் முன் பயிற்சி அளிக்க வேண்டிய தற்காலிக ஆசிரியர்கள் முன்கூட்டியே பணியில் இருந்து விடுவிக்கப்படுவதால், தேர்வு எழுதும் மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்படுவதாக ஆசிரியர் சங்க நிர்வாகிகள் கூறுகின்றனர். எனவே, இந்த ஆண்டு பிடி/பிஆர்டிஇ பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு தேர்வு எழுதியவர்களில் இருந்து காலியாக உள்ள 5,154 பணியிடங்களையும் முழுமையாக நிரப்ப வேண்டும்.
இதுவரை தேர்வுகள் நடத்தப்படாத மற்ற ஆசிரியர் பணியிடங்களுக்கு, காலியாக உள்ள அனைத்து ஆசிரியர் பணியிடங்களையும் உடனடியாக தேர்வு நடத்தி நிரப்ப வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.