சென்னை: தமிழ்நாடு மின்சார வாரியம் சார்பில் திருவள்ளூர் மாவட்டம் அத்திப்பட்டில் தலா 210 மெகாவாட் திறன் கொண்ட 3 அலகுகள் கொண்ட வடசென்னை அனல் மின் நிலையம் உள்ளது. அருகிலேயே, தலா 600 மெகாவாட் திறன் கொண்ட 2 அலகுகள் கொண்ட வடசென்னை விரிவாக்க அனல் மின் நிலையமும் உள்ளது.
இதன் அருகே, ‘வடசென்னை – 3’ என்ற பெயரில், 800 மெகாவாட் திறன் கொண்ட அனல் மின் நிலையம் அமைக்கும் பணியை, 2016-ம் ஆண்டு ஜனவரி மாதம், மின்சார வாரியம் துவக்கியது. இதன் கட்டுமான பணியை, மத்திய அரசின் பி.எச்.இ.எல்., நிறுவனம் மேற்கொண்டது. டர்பைன், ஜெனரேட்டர் போன்றவை மற்றும் இதர கட்டுமான பணிகள் தனியார் நிறுவனத்தால் மேற்கொள்ளப்பட்டது.
அதன்படி, ரூ.50 கோடி செலவில் கட்டி முடிக்கப்பட்ட 800 மெகாவாட் அனல் மின் நிலைய 3-ம் கட்டத்தை தமிழக முதல்வர் திறந்து வைத்தார். 6,376 கோடியில், மார்ச் 7-ம் தேதி, இந்த அனல்மின் நிலையத்தில் சோதனை நடவடிக்கைக்கான ஆயத்தப் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இந்த பணிகளை அமைச்சர் வி.செந்தில் பாலாஜி நேற்று ஆய்வு செய்தார். அப்போது, பொருளாதார மின் உற்பத்தி பணிகளை விரைந்து முடித்து டிசம்பர் இறுதிக்குள் முழு மின் உற்பத்தியை தொடங்க உரிய நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இந்த ஆய்வின்போது, தமிழ்நாடு மின்சார வாரியத் தலைவர் க.நந்தகுமார், இயக்குநர் (திட்டம்) கருக்குவேல் ராஜன் மற்றும் உயர் அதிகாரிகள் உடனிருந்தனர்.