சென்னை: கேரளாவை சேர்ந்த கீர்த்தி சுரேஷ் தமிழில் ‘இது என்ன மாயம்’ படத்தின் மூலம் அறிமுகமானார். அதன் பிறகு தமிழ், தெலுங்கு, மலையாளம் படங்களில் நடித்துள்ளார். தற்போது ‘பேபி ஜான்’ என்ற இந்தி படத்திலும் நடித்துள்ளார். இவர் கேரளாவை சேர்ந்த தொழிலதிபர் ஆண்டனி என்பவரை காதலித்து வந்தார். இவர்களது காதலுக்கு இரு வீட்டாரும் சம்மதம் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து கோவாவில் டிசம்பர் 11-ம் தேதி திருமணம் நடைபெற உள்ளது. இதில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் திரையுலகைச் சேர்ந்தவர்கள் பங்கேற்க உள்ளனர். இந்நிலையில் கீர்த்தி சுரேஷ் இந்து மதத்தில் இருந்து கிறிஸ்துவ மதத்திற்கு மாறி ஆண்டனியை திருமணம் செய்ய இருப்பதாக சினிமா வட்டாரத்தில் பேசப்படுகிறது.
இது குறித்து கீர்த்தி சுரேஷ் தரப்பில் எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை. நயன்தாரா ஏற்கனவே பிரபுதேவாவை காதலித்த போது கிறிஸ்துவ மதத்தில் இருந்து இந்து மதத்திற்கு மாறினார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் அந்த காதல் தோல்வியில் முடிந்தது. அதன் பிறகு தான் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.