சென்னை: தங்கம் விலை கடந்த அக்டோபரில் கடுமையாக உயர்ந்து ஒவ்வொரு நாளும் புதிய உச்சத்தை எட்டியது. கடந்த 23-ம் தேதி தங்கம் விலை ₹58,400-க்கு விற்கப்பட்டது. இதனால், தொடர்ந்து 6 நாட்களில் தங்கம் விலை ஒரு சவரன் ₹2,920 அதிகரித்தது. 24-ம் தேதி விடுமுறை என்பதால் தங்கம் விலையில் மாற்றம் இல்லை.
ஒரு நாள் விடுமுறைக்கு பின் நேற்று முன்தினம் தங்கச்சந்தை திறக்கப்பட்டது. தங்கம் விலையில் திடீர் மாற்றம் ஏற்பட்டது. அதுவும் வாரத்தின் முதல் நாளில், தங்கம் விலை கிராமுக்கு ₹100 குறைந்து கிராமுக்கு ₹7,200 ஆகவும், சவரன் ₹800 குறைந்து ₹57,600 ஆகவும் இருந்தது. ஒரு வாரமாக தங்கம் விலை கடுமையாக உயர்ந்து வரும் நிலையில், இந்த திடீர் விலை சரிவு நகை வியாபாரிகளுக்கு சற்று ஆறுதலை அளித்துள்ளது.
இந்நிலையில், நேற்று தங்கம் விலை மேலும் சரிந்தது. நேற்று மட்டும் தங்கம் விலை கிராமுக்கு ₹120 குறைந்து, ஒரு கிராம் ₹7,080-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு சவரன் ₹960 குறைந்து, ₹56,640-க்கு விற்கப்பட்டது. கடந்த 2 நாட்களில் தங்கத்தின் விலை ஒரு சவரன் ₹1,760 குறைந்துள்ளது. இந்த அதிரடி விலை வீழ்ச்சி நகை வியாபாரிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. வெள்ளியின் விலையும் 7 நாட்களுக்கு பிறகு நேற்று கிராமுக்கு ₹3 குறைந்துள்ளது. இதன் மூலம், ஒரு கிராம் ₹98-க்கும், ஒரு கிலோ வெள்ளி ₹98,000-க்கும் விற்பனையானது.