கலக்கப்போவது யாரு என்ற நகைச்சுவை நிகழ்ச்சியின் மூலம் சின்னத்திரையில் அறிமுகமான பாலா, இந்த நிகழ்ச்சியின் மூலம் கேபிஒய் பாலாவாக பிரபலமானார். குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்த அவர், வெள்ளித்திரையிலும் கலக்கி வருகிறார்.
ஒரு நடிகராக மட்டுமல்லாமல், ஸ்டாண்ட் அப் காமெடியன் தனது பரோபகார நடவடிக்கைகள் மூலம் தனக்கென ஒரு பெயரைப் பெற்றுள்ளார், மேலும் தனது வருமானத்தின் பெரும்பகுதியை ஆதரவற்றவர்களுக்கு உதவுவதற்காக செலவிடுகிறார். குழந்தைகளுக்கு கல்வி கற்பித்தல், ஆதரவற்ற முதியோர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு உதவுதல், போதிய மருத்துவ வசதிகள் இல்லாத இடங்களுக்கு ஆம்புலன்ஸ் வாங்கித் தருதல் என பலவற்றை தொடர்ந்து செய்து வருகிறார்.
மேலும் பாலா கடந்த ஆண்டு மிக்ஜாம் சூறாவளி தாக்கியபோது 200 குடும்பங்களுக்கு தலா ரூ. 1000 வழங்கினார். இப்படி பல விஷயங்களை செய்து வரும் பாலா, சமீபத்தில் பெட்ரோல் பங்கில் பணிபுரியும் இளைஞருக்கு இருசக்கர வாகனம் வாங்கி கொடுத்துள்ளார். பாலாவின் தன்னலமற்ற சேவையை பாராட்டிய நடிகர் ராகவா லாரன்ஸ், இனிமேல் அவர் செய்யும் அனைத்து நலத்திட்டங்களிலும் எனது பங்கும் இருக்கும் என்று கூறியுள்ளார்.
அந்த வகையில் கேபிஒய் பாலா மற்றும் ராகவா லாரன்ஸ் இருவரும் இணைந்து கணவனை இழந்த ஏழைப் பெண்ணுக்கு ஆட்டோ வாங்கி கொடுத்தனர். திருமணமான ஆரம்பத்திலேயே கணவனை இழந்து 3 பெண் குழந்தைகளைப் பெற்ற முருகம்மாள் என்ற பெண்ணுக்கு ஆட்டோ வாங்கினர். இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், பாலா மற்றும் லாரன்ஸ் இருவருக்கும் சமூக வலைதளங்களில் வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.
இந்நிலையில் பார்வை இழந்த சிறுவனுக்கு பாலா மற்றும் லாரன்ஸ் இருவரும் நிதி உதவி செய்துள்ளனர். இதுகுறித்து பாலா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். மாதேஸ்வரன் என்ற சிறுவன் சிறுவயதிலேயே கண்பார்வை இழந்திருந்தான், ஆனால் அவனது தந்தையிடம் அறுவை சிகிச்சை செய்ய பணம் இல்லை. எனினும் அறுவை சிகிச்சை செய்தால் சிறுவனுக்கு கண் பார்வை திரும்பும் என்றார். தானும் ராகவல் லாரன்சும் இணைந்து அச்சிறுவானுக்கு அறுவை சிகிச்சைக்கு பண உதவி செய்ததாகவும் பாலா குறிப்பிட்டுள்ளார். பாலா-லாரன்ஸின் செயலுக்கு சமூக வலைதளங்களில் வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.