மேஷம்: பழைய பிரச்னைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு காண்பீர்கள். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். உத்தியோகஸ்தர்கள் பணியிடத்தில் முக்கிய ஆலோசனைகளை வழங்குவார்கள். தொழில் பயணங்கள் லாபகரமாக இருக்கும்.
ரிஷபம்: வேலையில் தேவையற்ற அலைச்சல், தடைகள் வரலாம். எதிலும் நிதானத்துடன் செயல்படுவது நல்லது. அண்டை வீட்டாருடன் நிதானமாக பழகவும். வியாபாரத்தில் ஓரளவு லாபம் கிடைக்கும். அலுவலகத்தில் அமைதி காக்கவும்.
மிதுனம்: குடும்பத்தினரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். சேமிக்கும் எண்ணம் வரும். பிள்ளைகளால் பெருமைப்படுவீர்கள். அலுவலகத்தில் உங்கள் நற்பெயர் உயரும். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் வருவார்கள்.
கடகம்: அரசு காரியங்களில் இருந்து வந்த தடைகள் நீங்கும். வெளியூர் உறவுகள் அதிகரிக்கும். பயணங்களால் மகிழ்ச்சி உண்டாகும். வியாபாரத்தில் பொருட்கள் விற்கப்படும். அலுவலகத்தில் அமைதி நிலவும்.
சிம்மம்: வெளியூரில் இருந்த உறவினர்கள், நண்பர்கள் ஓடி வந்து பேசுவார்கள். தம்பதிகளிடையே நெருக்கம் அதிகரிக்கும். அக்கம்பக்கத்தினர் ஆதரவாக இருப்பார்கள். வியாபாரத்தில் பாக்கிகளை வசூலிப்பீர்கள். உத்தியோகபூர்வ பயணத்தை மேற்கொள்வீர்கள்.
கன்னி: வாங்கிய தொகையை அவசரமாகச் செலுத்துவீர்கள். தாய்வழி உறவினர்கள் மத்தியில் உங்கள் மரியாதை அதிகரிக்கும். வியாபாரம் விறுவிறுப்பாக இருக்கும். அலுவலகத்தில் விரும்பிய பதவிக்கு மாற்றப்படுவீர்கள்.
துலாம்: உங்கள் பிள்ளைகள் பிடிவாத குணம் குறைந்து உங்கள் பேச்சைக் கேட்பார்கள். உங்கள் மகளுக்கு விரைவில் திருமணம் நடக்கும். வியாபாரத்தில் வராத கடன்கள் வரும். அலுவலகத்தில் உங்களுக்கு இருந்த தேவையற்ற பழி நீங்கும்.
விருச்சிகம்: எதிர்பார்த்த உதவிகள் சரியான நேரத்தில் கிடைக்கும். தெளிவான முடிவுகளால் பிரச்சனைகள் நீங்கும். வியாபாரத்தில் ஏற்றம் காண்பீர்கள். அலுவலகத்தில் இழுபறியாக இருந்த அனைத்து பணிகளையும் செய்து முடிப்பீர்கள்.
தனுசு: குடும்பத்தில் விட்டுக் கொடுப்பது நல்லது. பிள்ளைகளால் தேவையற்ற செலவுகள் ஏற்படும். வியாபாரத்தில் போட்டி இருக்கும். புதிய பங்குதாரர் கிடைப்பார். அலுவலகத்தில் வாக்குவாதங்களை முற்றிலும் தவிர்ப்பீர்கள்.
மகரம்: வெளி வட்டத்தில் கௌரவப் பதவிகள் தேடி வரும். மனைவி மூலம் ஒத்துழைப்பு அதிகரிக்கும். புதிய வேலை கிடைக்கும். அரசு வழியில் அனுகூலப் பலன்கள் உண்டாகும். வியாபாரம் சூடுபிடிக்கும். உங்களின் தொழிலில் உயர்வைக் காண்பீர்கள்.
கும்பம்: சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்களிடம் அறிமுகம் கிடைக்கும். வியாபாரத்தில் புதிய பொருட்களை வாங்குவீர்கள். உத்தியோகத்தில் உங்களின் மதிப்பும் மரியாதையும் உயரும். உங்கள் பொறுப்பு அதிகரிக்கும்.
மீனம்: முக்கிய பிரமுகர்களின் உதவியால் சில பணிகளை விரைந்து முடிப்பீர்கள். அரசாங்கத்தால் ஆதாயம் பெறுவீர்கள். வியாபாரத்தில் பாக்கி வசூலிப்பீர்கள். அலுவலகத்தில் யாரையும் குறை கூறாதீர்கள்.