சென்னை: இன்று சென்னையில் மின்தடை செய்யப்படும் பகுதிகள் பற்றி அறிவிக்கப்பட்டுள்ளது, மேலும் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மதியம் 2.00 மணிக்கு மின்விநியோகம் கொடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு மின்சார வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
சென்னையில் இன்று(சனிக்கிழமை) காலை 9:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2:00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின்விநியோகம் கொடுக்கப்படும்.
பாரிமுனை: தம்புசெட்டி தெரு, மோர் தெரு, லிங்கிசெட்டிதெரு, அங்கப்பன்நாயக்கன் தெரு, ஏரபாலுசெட்டி தெரு, போஸ்ட்ஆப்பிஸ் தெரு, கச்சாலிஸ்வர் அகரகாரம் தெரு, இரண்டாவது கடற்கரை சாலை, முகார்நலமுத்து தெரு, பர்மாபஜார், மற்றும் சுற்றியுள்ள பகுதிகள்.
சத்தியா நகர் பி பிரிவு, மற்றும் சி பிரிவு, சென்னை மாநகராட்சி பார்க், துறைமுகம், மற்றும் ராணுவ குடியிருப்பு இந்திய கடற்படை,ராணுவ உணவகம் மற்றும் ரிசர்வ் வங்கி, கடற்கரை நகர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகள்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.