இந்திய ராணுவம் வங்கதேசத்துடனான இந்திய எல்லையில் பைரக்டர் டிபி2 ட்ரோன்களை நிலைநிறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. சமீபத்தில் வங்கதேச அரசு இவற்றை வாங்கியதாகவும் கூறப்படுகிறது.
வங்கதேசத்தின் ட்ரோன்கள்
மேற்கு வங்க எல்லையில் நிலைநிறுத்தப்பட்டுள்ள இந்த ஆளில்லா விமானங்களின் செயல்பாடுகளை ராணுவம் கண்காணித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், எல்லையில் கண்காணிப்பு மற்றும் போதைப்பொருள் கடத்தலை தடுக்கும் வகையில் ஆளில்லா விமானங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக வங்கதேசம் விளக்கம் அளித்துள்ளது.