சென்னை: நடிகர்கள் சசிகுமார், சிம்ரன் மற்றும் பல முக்கிய நடிகர்கள் நடித்துள்ள “டூரிஸ்ட் ஃபேமிலி” படத்தின் டைட்டில் டீசர் வெளியாகி ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர். இப்படத்தில் சசிகுமாரும் சிம்ரனும் கணவன்-மனைவியாக நடிக்கிறார்கள், மேலும் அவர்கள் இரண்டு வளர்ந்த மகன்களுக்கு பெற்றோராகவும் தோன்றுகிறார்கள். இப்படத்தை அபிஷன் ஜிவின் மற்றும் இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் இயக்கியுள்ளனர்.
இளங்கோ கமரவேல், யோகி பாபு, எம்.எஸ்.பாஸ்கர், மிதுன் ஜெய்சங்கர், ரமேஷ் திலக் என பல நடிகர்கள் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். படத்தின் டைட்டில் டீசரை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் வெளியிட்டு படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இப்படத்தில் சசிகுமார் மற்றும் சிம்ரன் இருவரும் வீட்டை விட்டு ஓடிப்போய் கல்யாணம் செய்து கொள்கிறார்கள் டயலாக் டெலிவரியும், சஸ்பென்ஸ் காட்சிகளும் ரசிகர்களை மயக்கத்தில் ஆழ்த்தியுள்ளது. இலங்கையின் தமிழ்ப் பகுதியில் படமாக்கப்பட்ட இந்தக் காட்சிகளில் சசிகுமார், சிம்ரன் இருவரின் நடிப்பும் நன்றாக இருக்கிறது.
இதன் மூலம் “டூரிஸ்ட் ஃபேமிலி” படம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. குடும்ப நகைச்சுவை மற்றும் சென்டிமென்ட்டை மையமாக வைத்து இயக்கும் படம் இது என்று கூறப்படுகிறது.
சசிகுமார் நடிப்பில் இதுவரை வெளிவந்த “சுப்ரமணியபுரம்”, “அயோதி”, “கருடன்” போன்ற படங்கள் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இப்போது அந்த வரிசையில் “டூரிஸ்ட் ஃபேமிலி” படமும் சேர்ந்து ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் என நம்பப்படுகிறது.
இந்தப் படம் பெரிய குடும்பப் படமாக அமையும் என்று கூறப்படுகிறது. “டூரிஸ்ட் ஃபேமிலி” படத்தின் படப்பிடிப்பு துவங்கி பரபரப்பாக நடந்து வரும் நிலையில், படத்தின் அடுத்தக்கட்ட பணிகள் விரைவில் முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.