மும்பையை தலைமையிடமாகக் கொண்டு, உலோகங்கள் மற்றும் கனிம வளங்களை பிரித்தெடுத்தல் போன்ற நடவடிக்கைகளில் வேதாந்தா ஈடுபட்டுள்ளது.
இந்நிலையில் கடந்த 10ம் தேதி வேதாந்தா நிறுவனத்தின் பங்கின் விலை 5% வரை உயர்ந்து 525.15 ரூபாயை எட்டியது. இதனால், அதன் சந்தை மூலதனம் ரூ.2.03 லட்சம் கோடியாக உயர்ந்தது. வர்த்தகத்தின் முடிவில், பங்குகளின் விலை 2.82% உயர்ந்து ரூ.514.35 ஆக இருந்தது.
கடந்த ஓராண்டில் வேதாந்தா பங்குகள் 101% வளர்ச்சி கண்டுள்ளது.
முன்னதாக, தரகு நிறுவனங்கள் எதிர்கால வளர்ச்சி குறித்து எதிர்மறையான கணிப்புகளை வெளியிட்டன.