மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம்-ஊட்டி இடையே சிறப்பு மலை ரயில் இயக்கப்பட்டு வருகிறது. யுனெஸ்கோ பட்டியலில் இடம் பெற்றுள்ள இந்த மலை ரயிலில் தமிழகம் மட்டுமின்றி கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட அண்டை மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இந்நிலையில், நீலகிரி மாவட்டத்திற்கு விடப்பட்ட கனமழை எச்சரிக்கை காரணமாக நேற்று மற்றும் நேற்று முன்தினம் உட்பட இரு நாட்களுக்கு மலை ரயில் சேவையை ரத்து செய்து தெற்கு ரயில்வே உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் கனமழையால், மலை ரயில் பாதையில் பல இடங்களில் மண் சரிவு ஏற்பட்டு, மரங்கள், பாறைகள் விழுந்து தண்டவாளங்கள் சேதமடைந்தன.
மலை ரயில் பாதையில் சீரமைப்புப் பணிகள் நடைபெற்று வருவதாலும், இன்னும் 3 நாட்களுக்கு கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளதாலும், மலை ரயில் சேவை மூன்று நாட்களுக்கு (டிசம்பர் 15, 16, 17), குன்னூர் இடையே ரயில் சேவை ரத்து. ஊட்டி-குன்னூர் ரயில்களும் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே சேலம் கோட்ட நிர்வாகம் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.