புதுடெல்லி: “தற்போதைய காலகட்டத்தில் நேருவின் வளர்ச்சி மாடல் தோல்வியடைந்துள்ளது. அதை சீர்திருத்த முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம்,” என வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் கூறினார்.
நிதி ஆயோக் முன்னாள் துணைத் தலைவர் அரவிந்த் பனகாரியா எழுதிய ‘நேருவின் வளர்ச்சி மாடல் ‘ புத்தகம் டெல்லியில் வெளியிடப்பட்டது. வீடியோ கான்பரன்சிங் மூலம் நிகழ்ச்சியில் பங்கேற்ற ஜெய்சங்கர், 1947ல் அமெரிக்க நிபுணரான ஜான் பாஸ்டர் டல்லஸின் கருத்துகளை நினைவு கூர்ந்தார். அப்போது இந்தியாவில் உள்ள இடைக்கால இந்து அரசு கம்யூனிச கொள்கைகளை கடைபிடிப்பதாக கூறப்பட்டது.
அப்போது கூறிய கருத்துகள் தற்போது உண்மையா என்ற கேள்விக்கு புத்தகம் பதில் அளித்துள்ளது என்றார். கம்யூனிஸ்ட் நாடுகள் பொருளாதாரக் கொள்கைகளை மாற்றிக்கொண்டாலும், இந்தியா தனது கொள்கைகளை மாற்ற முயற்சிக்கவில்லை என்றும், நேருவின் கொள்கைகள் அறிவியல், அரசியல், நீதித்துறை, ஊடகம், கல்வி உள்ளிட்ட பல துறைகளில் உறுதியாக இருப்பதாகவும் வலியுறுத்தினார்.
பின்னர், கடந்த 33 ஆண்டுகளில் இந்தக் கொள்கைகள் எடுபடவில்லை என்பதை உணர்ந்து 2014ல் சீர்திருத்த முயற்சிகள் தொடங்கப்பட்டன என்றார்.