தமிழகம் முழுவதும் 1.5 கோடிக்கும் அதிகமான நுகர்வோர்களுடன், 4.5 லட்சம் கிராமப்புற பால் உற்பத்தியாளர்களின் வாழ்வாதாரமாக ஆவின் திகழ்கிறது. நாள் ஒன்றுக்கு 35 லட்சம் லிட்டர் பாலை கொள்முதல் செய்து, 150க்கும் மேற்பட்ட பால் துணைப் பொருட்களை விற்பனை செய்து, ஆவின் நிறுவனம் பொதுமக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்து, சமப்படுத்தப்பட்ட பால் (நீலம்), நிலைப்படுத்தப்பட்ட பால் (பச்சை), முழுக் கொழுப்புள்ள பால் (ஆரஞ்சு), இரட்டைச் சமப்படுத்தப்பட்ட பால். (மெஜந்தா), வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் டி ஆகியவை ‘டிலைட் மில்க்’ (ஊதா) போன்ற பால் வகைகளை செறிவூட்டலுடன் அறிமுகப்படுத்தி நாளொன்றுக்கு சுமார் 33 லட்சம் லிட்டர் பால் விற்பனை செய்து வருகிறது.
மேலும், ஆவின் நிறுவனம் UHT TM மில்க் (UHT TM பால்) 450ml மற்றும் 150ml அளவுகளில் பின்வரும் சிறப்பு தள்ளுபடி விலையில் நீட்டிக்கப்பட்ட பயன்பாட்டுக்காக விற்பனை செய்கிறது.
* இப்பாலினை 90 நாட்கள் வரை குளிர்சாதனப் பெட்டி இல்லாமல் பயன்படுத்தலாம். இதில் ரசாயனங்கள் சேர்க்காமல் நவீன தொழில்நுட்பம் நிரம்பியிருப்பதால் நீண்ட தூர பயணத்திற்கு ஏற்றதாக உள்ளது. உணவகங்கள், ஜூஸ் கடைகள், ஹோட்டல்கள், சமையல்காரர்கள், தொழில்முனைவோர், மலைவாழ் மக்கள், மீனவர்கள் இப்பாலை காய்ச்சாமல் அப்படியே உபயோகிக்கின்றனர்.
எனவே பொதுமக்கள் தள்ளுபடி விலையில் விற்பனை செய்யப்படும் UHT TM Milk – 450 ml ரூ.28/-க்கும், UHT, TM Milk -150 ml ரூ.10/-க்கும் வாங்கி பயன்பெறுமாறு ஆவின் நிறுவனம் கேட்டு கொண்டுள்ளது.