திருவனந்தபுரம்: சபரிமலை செல்லும் பெரும்பாலான பக்தர்கள் பம்பை – சன்னிதானம் வழித்தடத்தை பயன்படுத்துகின்றனர். பம்பைக்கு வாகனத்தில் சென்ற பிறகு, அங்கிருந்து சுமார் 5 கி.மீ. இதுதவிர வண்டிப்பெரியாற்றில் இருந்து பக்தர்கள் புல்மேடு வழியாக சன்னிதானத்திற்கு நடந்து செல்கின்றனர்.
இந்த பாதையில் 15 கி.மீ., நடந்து செல்ல வேண்டியுள்ளது. இதுதவிர எருமேலியில் இருந்தும் பக்தர்கள் நடந்தே சன்னிதானத்திற்கு செல்கின்றனர். 50 கி.மீ தொலைவில் உள்ள இந்த வழித்தடம் பெரிய பாதை என்று அழைக்கப்படுகிறது. இவ்விரு வழித்தடங்களிலும் செல்லும் பக்தர்கள் நீண்ட நேரம் நடந்தே சோர்வடைகின்றனர்.
எனவே, இவ்வழியாக வருபவர்கள் உடனடியாக தரிசனம் செய்ய சிறப்பு வசதிகள் செய்து தர வேண்டும் என பக்தர்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்த கோரிக்கையை திருவிதாங்கூர் தேவசம் போர்டு ஏற்றுக்கொண்டுள்ளது. புல்மேடு, எருமேலி மார்க்கமாக வரும் பக்தர்களுக்காக விரைவில் சிறப்பு வரிசை அமைக்கப்படும் என தேவசம்போர்டு அறிவித்துள்ளது.