அமர்க்களம் படத்தில் நடித்தபோது அஜித்தும் ஷாலினியும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். அதன் பிறகு சினிமாவில் இருந்து ஒதுங்கிய ஷாலினி பேட்மிண்டனில் கவனம் செலுத்தினார். இந்த தம்பதிக்கு அனுஷ்கா மற்றும் ஆத்விக் என்ற இரு குழந்தைகள் உள்ளனர்.
அவர்கள் வெற்றிகரமாக 23 ஆண்டுகளாக திருமண வாழ்க்கையில் உள்ளனர் . அஜித் கடந்த சில வருடங்களாக பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளாமல் இருந்து வருகிறார். அதேபோல், அவர் எந்த சமூக வலைதளங்களிலும் இல்லை. இந்நிலையில் ஷாலினி அஜித் கடந்த 2022ம் ஆண்டு இன்ஸ்டாகிராமில் இணைந்தார்.அன்றிலிருந்து அவர் தனது குடும்பத்தினருடன் அனைத்து புகைப்படங்களையும் பகிர்ந்து வருகிறார்.
இந்நிலையில், அஜித் படப்பிடிப்பிற்காக அஜர்பைஜான் சென்றுள்ள நிலையில், ஷாலினிக்கு சென்னையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் அவருடன் இருக்க அஜித் சென்னை திரும்பவில்லை. அங்கு சென்ற அவர் தனது மனைவியின் உடல்நிலை குறித்து மருத்துவர்களிடம் தொலைபேசியில் கேட்டறிந்தார்.