மதுரை: தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக ஓய்வுபெற்ற பணியாளர்கள் கூட்டமைப்பு மற்றும் பணியாளர்கள் கூட்டமைப்பு ஆகியவை இணைந்து வெள்ளி விழா மற்றும் அகில இந்திய ஓய்வூதியர் தின விழா மதுரையில் நடைபெற்றது. டிடிஆர்எஸ்எப் மாநிலத் தலைவர் எஸ்.ஷாஜகான் தலைமை வகித்தார். கூட்டமைப்பின் மாநில நிர்வாகிகள் திருமலைசாமி, எஸ்.நாகராஜன், ஏ.ராஜாஜி, பி.ராமசாமி, எஸ்.சம்பத், ஏ.செண்பகம், எஸ்.முருகேசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
சிறப்பு விருந்தினர்களாக அஞ்சல் துறை சார்பில் கே.செல்வராஜ், அரசு ஓய்வூதியர் அமைப்பைச் சேர்ந்த ஆர்.மகாலிங்கம் ஆகியோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் 109 மாதங்களாக நிலுவையில் உள்ள ஓய்வூதியர்களுக்கு அகவிலைப்படியை (டிஏ) உடனடியாக வழங்குதல், ஊழியர்களின் நிலுவையில் உள்ள ஊதிய ஒப்பந்தத்தை உடனடியாக வழங்குதல், தனியார் நிறுவனங்களிடம் இருந்து எடுக்கப்பட்ட பேருந்துகளின் ஒப்பந்தப் பணிகளை முற்றிலுமாக கைவிடுதல் உள்ளிட்ட 10 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
போக்குவரத்துக் கழகங்களின் வருமானம் மற்றும் செலவினங்களுக்கு இடையிலான வேறுபாட்டை ஈடுகட்ட பட்ஜெட்டில் ஆண்டுதோறும் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் உள்ளிட்ட 10 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.