ரஷ்யாவை எதிர்த்து போரிட்டு வரும் உக்ரைன் ராணுவத்திற்கு பிரிட்டன் 286 மில்லியன் டாலர்கள் உதவியாக அறிவித்துள்ளது. ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையிலான போர் 1000 நாட்களைக் கடந்துள்ளது. உலகம் போரை முடிவுக்கு கொண்டு வர வலியுறுத்தி வருகிறது, ஆனால் இரு தரப்பிலும் தாக்குதல்கள் தீவிரமடைந்து வருகின்றன.
பிரிட்டிஷ் பாதுகாப்பு செயலாளர் ஜான் ஹீலி, 2025ல் உக்ரைனுக்கு ஆதரவு கொடுப்பது குறித்து உக்ரைன் அதிகாரிகளுடன் கிய்வ் பேச்சுவார்த்தை நடத்தினார். அடுத்த ஆண்டு, உக்ரைன் கடற்படையை வலுப்படுத்த சிறிய படகுகள், ட்ரோன்கள் மற்றும் ஆயுதங்கள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
ஜான் ஹீலி, “உக்ரைனுடன் பிரிட்டன் தோளோடு தோள் நிற்கும். இந்தப் போரில் புதினால் வெற்றி பெற முடியாது” என்றார்.