ரிசர்வ் வங்கியின் சமீபத்திய அறிக்கை மாநிலங்களின் மிகுந்த மானிய செலவுகள் மற்றும் அதிகப்படியான கடன்களால் ஏற்படும் சிக்கல்களைப் பற்றிய கவலைகளை எழுப்பியுள்ளது.
விவசாய கடன் தள்ளுபடி,இலவச/தள்ளுபடி மின்சாரம்இலவச போக்குவரத்து, சமையல் எரிவாயுவிவசாயிகள், இளைஞர்கள், பெண்களுக்கு பண உதவிகள் மற்றும் சமீபத்தில் சில மாநிலங்கள், குறிப்பாக டெல்லி அரசு, மகளிருக்கு மாதம் ₹1,000 வழங்கும் முக்யமந்திரி மகளிர் சன் மான் யோஜனா போன்ற திட்டங்களை அறிவித்துள்ளன.
மாநிலங்களுக்கு அதிகப்படியான மானிய செலவுகள் காரணமாக, உற்பத்தி செலவுகளுக்கு தேவையான பணம் தடைபடுகிறது. இதனால் மாநிலங்கள் தங்கள் கடன் நிலைகளை மேலும் உயர்த்தும் அபாயம் உள்ளது.
மாநிலங்களின் கடன் நிலை GDPயின் 28.5% ஆக உள்ளது (மார்ச் 2024 நிலவரம்).FRBM குழு பரிந்துரைப்படி, இது 20% ஆக இருக்க வேண்டும்.மாநிலங்கள் தங்கள் கடனைக் கட்டுப்படுத்த குறிப்பிட்ட காலக்கெடு மற்றும் தொளிவான திட்டங்களை உருவாக்க வேண்டும்.
ரிசர்வ் வங்கி அறிக்கை கூறுகிறது: மைய அரசின் அதிக எண்ணிக்கையான திட்டங்கள், மாநிலங்களுக்கு அவர்களுக்கே ஏற்புள்ள செலவுகளுக்கு பணவளங்களை பயன்படுத்துவதில் தடை செய்கின்றன. இதனால் கூட்டுறவு நிதி தன்னாட்சிக்கு கேடு ஏற்படுகிறது.
Outcome budgeting (முடிவின் அடிப்படையிலான பட்ஜெட்) மூலம் செலவுகளை கண்காணிக்கவும், பொது நிதி திறனை அதிகரிக்கவும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.பொதுமக்கள் மற்றும் பொருளாதார மேம்பாட்டுக்கு உண்மையான நன்மை கிடைக்கும் பகுதிகளில் செலவுகளை முன்னுரிமை அளிக்க வேண்டும்.
காலநிலை மாற்றங்களை சமாளிக்க கிளைமேட் பட்ஜெட்டிங்கை அமல்படுத்த மாநிலங்களுக்கு சிபாரிசு செய்யப்பட்டுள்ளது.
மாநிலங்கள் மானியங்களை கட்டுப்படுத்தி, கடன் நிலையை சீராக வைத்துக்கொள்வது மட்டுமல்லாமல், செலவுகளை உற்பத்தி மற்றும் சமூக மேம்பாட்டுக்குப் பயனளிக்கும் வகையில் திட்டமிட வேண்டும் என்று ரிசர்வ் வங்கி உறுதியாக அறிவுறுத்தியுள்ளது.