புதுடெல்லி: மூன்றாவது முறையாக பதவியேற்ற பிறகு மோடி பல்வேறு நாடுகளுக்கு அரசு முறை பயணமாக உள்ளார். இதைத் தொடர்ந்து மோடி தற்போது இரண்டு நாள் பயணமாக குவைத் சென்றுள்ளார். இதுகுறித்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
குவைத் வளைகுடா நாட்டின் மன்னர் ஷேக் மெஷல் அல் – அகமது அல் – ஜாபர் அல் சபாவின் அழைப்பின் பேரில் பிரதமர் மோடி டிசம்பர் 21 மற்றும் 22-ம் தேதிகளில் குவைத் செல்கிறார். இந்த பயணத்தின் போது, குவைத் உயர் அதிகாரிகள் மற்றும் இந்திய சமூகத்தினருடன் மோடி உரையாடுகிறார்.
இந்தியாவுக்கும் குவைத்துக்கும் இடையிலான பன்முக உறவுகளை மேலும் வலுப்படுத்த மோடியின் பயணம் உதவும். வெளிவிவகார அமைச்சு இதனைத் தெரிவித்துள்ளது. முன்னதாக, மறைந்த பிரதமர் இந்திரா காந்தி 1981-ம் ஆண்டு குவைத் சென்றிருந்தார். இந்திய பிரதமர் மோடி தற்போது குவைத் சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.