சென்னை: காலை உணவு ஹெல்தியாக இருந்தால்தான் நாள் முழுவதும் ஆரோக்கியமாகவும், சுறுசுறுப்புடனும் இயங்க முடியும். அதற்கு என்ன செய்யலாம் என்று தெரிந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள் :
ஓட்ஸ் – 1/2 கப்
முட்டை – 2
தக்காளி – சிறியது 1
வெங்காயம் – சிறியது 1
பச்சை மிளகாய் – 1
மஞ்சள் – 1/4 டீஸ்பூன்
மிளகுத்தூள் – 1 டீஸ்பூன்
கேரட் – சிறியது 1
கறிவேப்பிலை – சிறிதளவு
உப்பு – தேவையான அளவு
செய்முறை: முதலில் தக்காளி, வெங்காயம், ப.மிளகாய், கேரட்டை பொடியாக நறுக்கி கொள்ள வேண்டும். பின் ஓட்ஸை மிக்ஸியில் போட்டு பொடியாக்கிக்கொள்ள வேண்டும். அதன்பின், முட்டையை உடைத்து வெள்ளையை மட்டும் தனியாக எடுத்துக்கொள்ளுங்கள்.
பவுலில் அரைத்த ஓட்ஸுடன் அனைத்து பொருட்களையும் சேர்த்துக்கொள்ளுங்கள். இறுதியாக உப்பு, முட்டை வெள்ளையை சேர்த்து நன்கு கலந்துகொள்ளுங்கள். தோசை கல் அடுப்பில் வைத்து சூடானதும் எண்ணெய் தேய்த்துவிட்டு தோசைபோல் ஊற்றவும். வெந்ததும் மறுபுறம் திருப்பி போட்டு வேக வைத்து எடுத்து பரிமாற ஹெல்தியான ஓட்ஸ் வெஜிடபிள் ஆம்லெட் தயார்.