அல்லு அர்ஜுனின் நடிப்பில் சுகுமாரின் இயக்கத்தில் 2021 ஆம் ஆண்டு வெளியான புஷ்பா திரைப்படம், மிகப்பெரிய வெற்றியைக் பெற்றது. இந்த படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றிருந்தாலும், வசூலில் பெரும் சாதனை படைத்தது. இப்படம், அதன் கதையினாலும், திரைக்காட்சி மற்றும் அதில் நடித்த அனைத்து நடிகர்களின் செயல்பாடுகளாலும் ரசிகர்களை கவர்ந்தது.
இரண்டாம் பாகம், முதல் பாகத்தைவிட மிகப்பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டு, அதிலும் பெரும் வெற்றி பெற்றது. புஷ்பா 2 படம் ஆயிரக்கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்தது. மேலும், புஷ்பா படத்தின் மூலம், அல்லு அர்ஜுனுக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருதும் கிடைத்தது.
ஆனால், புஷ்பா படத்தில் முதலில் மகேஷ் பாபுவே நடிப்பது என கூறப்பட்டது. கதை மகேஷ் பாபுவிற்கு பிடித்திருந்தாலும், சில முக்கியமான மாற்றங்களை சுகுமார் செய்துள்ளார். இதற்கான உடன்பாடு சரியாக இல்லாததால், மகேஷ் பாபு இப்படத்தில் இருந்து விலகியதாக கூறப்படுகிறது. இது மகேஷ் பாபுவின் ரசிகர்களிடையே ஒரு ஏக்கத்தை உருவாக்கியது. அவர்கள், “மகேஷ் பாபு இருந்திருந்தால், இப்படம் இன்னும் சிறப்பாக இருந்திருக்குமா?” எனக் கேட்கின்றனர்.
இதன் பின்னர், அல்லு அர்ஜுன் பெற்ற வாய்ப்பினை சரியான முறையில் பயன்படுத்தி, இந்தியத் திரையுலகில் மிகப்பெரிய நட்சத்திரமாக உயர்ந்தார். புஷ்பா படத்தின் மூலம் அவர் வெற்றியை அடைந்து, தற்போது தென்னிந்தியாவில் அதிக சம்பளம் பெறும் நடிகராக உள்ளார்.