திருமணத்திற்கு பிறகு நடிகைகளுடன் ரகசிய உறவில் இருந்த தமிழ் சினிமா பிரபலங்களின் விரிவான பட்டியலை இந்த தொகுப்பில் காணலாம்.
நாகார்ஜுனா – தபு
நடிகர் நாகார்ஜுனா, நடிகை அமலா மற்றும் லட்சுமியை திருமணம் செய்து கொண்டாலும், திருமணத்திற்கு பிறகு நடிகை தபுவுடன் ரகசிய உறவில் ஈடுபட்டதாக கிசுகிசுக்கப்பட்டது. நடிகை தபுவுக்கும் அவருக்கும் தொடர்பு இருந்ததால் திருமணம் செய்து கொள்ளவில்லை என்று கூறப்பட்டது. இருவரும் 10 ஆண்டுகளாக ரகசிய உறவில் இருந்ததாக கூறப்படுகிறது. இருப்பினும், தபு மற்றும் நாகார்ஜுனா இருவரும் நெருங்கிய நண்பர்கள் என்று பல்வேறு பேட்டிகளில் கூறியுள்ளனர்.
போனி கபூர் – ஸ்ரீதேவி
பாலிவுட்டில் பல்வேறு வெற்றிப் படங்களை தயாரித்து முன்னணி தயாரிப்பாளராக இருப்பவர் போனி கபூர். இவரது முதல் மனைவி பெயர் மோனா கபூர். 13 ஆண்டுகளுக்குப் பிறகு அவர்களது திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்தது. இவர்களின் பிரிவுக்கு நடிகை ஸ்ரீதேவியே காரணம் என கூறப்படுகிறது. ஏனெனில் ஸ்ரீதேவி தனது முதல் மனைவி மோனா கபூரை விட்டு பிரிவதற்கு முன்பு நடிகை ஸ்ரீதேவியுடன் ரகசிய உறவில் இருந்தார். இதனால் நடிகை ஸ்ரீதேவி திருமணத்திற்கு முன்பே கர்ப்பமானதாக செய்திகள் வெளியாகின.
பிரபுதேவா – நயன்தாரா
பிரபுதேவா இந்திய திரையுலகில் பிரபல நடன இயக்குனர் மற்றும் நடிகர் ஆவார். அவர் 1995 இல் ரம்லட்டை மணந்தார். இந்த ஜோடி 2011 இல் விவாகரத்து பெற்றது. லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவுடனான ரகசிய உறவும் அவர்கள் பிரிந்ததற்குக் காரணமாகக் கூறப்பட்டது. ரம்லத்தை விவாகரத்து செய்வதற்கு முன்பு நடிகை நயன்தாராவை காதலித்து வந்தார் பிரபுதேவா. இதை அறிந்த கடுப்பான ரம்லத், நயன்தாராவை எங்கு பார்த்தாலும் மிதித்து விடுவேன் என ஆவேசமாக கூறி வந்தார்.
தனுஷ் – அமலா பால்
கோலிவுட்டில் அதிகம் பேசப்படும் ஹீரோக்களில் தனுஷும் ஒருவர். இவர் நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யாவை காதலித்து 2004ல் திருமணம் செய்து கொண்டார்.இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்தனர். தனுஷ் மற்றும் நடிகை அமலா பால் இடையேயான கிசுகிசுவும் இருவரின் விவாகரத்துக்கு ஒரு காரணமாக கூறப்படுகிறது.
கே.எஸ்.ரவிக்குமார் – ரம்யாகிருஷ்ணன்
கோலிவுட்டில் கமர்ஷியல் ஹிட் கொடுப்பதில் பெயர் பெற்ற கில்லாடி இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார், நடிகை ரம்யா கிருஷ்ணனை காதலிப்பதாக கோடம்பாக்கத்தில் ஒரு வதந்தி பரவியது. கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ரம்யா கிருஷ்ணன் தொடர்ந்து நடித்து வந்ததாகவும், இருவருக்கும் இடையே ரகசிய தொடர்பு இருப்பதாகவும் கூறப்பட்டது. இந்த விவகாரம் அவரது மனைவிக்கு தெரிய வந்ததால் இருவரும் பிரிந்து விட்டதாக வதந்தி பரவியது.
கமல்ஹாசன் – சிம்ரன்
உலக நாயகன் கமல்ஹாசனும் பல்வேறு காதல் சர்ச்சைகளில் சிக்கியுள்ளார். கமல் முதலில் வாணி கணபதியையும் இரண்டாவதாக சரிதாவையும் திருமணம் செய்து இருவரும் விவாகரத்தில் முடிந்தது. பின்னர் அவர் நடிகை சிம்ரனை காதலிப்பதாக பத்திரிகைகளில் செய்திகள் வெளியாகின. கடுப்பான கமல், எனது படுக்கையறைக்குள் எட்டிப்பார்ப்பது தான் உங்கள் வேலையா என்று கூறியது குறிப்பிடத்தக்கது.