“வாழும் நாஸ்ட்ராடாமஸ்” என பரவலாக அறியப்படும் பிரேசிலைச் சேர்ந்த சித்த மருத்துவர் அதோஸ் சலாமி, எதிர்காலத்தில் உலகளவில் நிகழப்போகும் நெருக்கடிகள் குறித்து தனது முன்னறிவிப்புகளால் கவனத்தை ஈர்த்து உள்ளார். சமீபத்திய நேர்காணலில், அவர் வரவிருக்கும் மூன்றாம் உலகப் போரை பற்றி கடுமையான எச்சரிக்கையை வெளியிட்டார். அவர் கூறியபடி, இந்தப் போர் பாரம்பரிய போர் போன்று இல்லாமல், தொழில்நுட்ப ரீதியான போராக அமையும்.
இதற்கு முன், கோவிட்-19 தொற்றுநோய், எலான் மஸ்க் ட்விட்டரை கையகப்படுத்துதல் மற்றும் இரண்டாம் எலிசபெத் மகாராணியின் மறைவு போன்ற முக்கிய நிகழ்வுகளை முன்கூட்டியே கணித்த சலோமி, தற்போது நவீன போரின் மூலம் மனிதகுலம் மாற்றத்தின் விளிம்பில் இருப்பதாக நம்புகிறார். “இது மனிதர்களின் போர் மட்டுமல்ல, இயந்திரங்களின் போர்” என்று அவர் கூறியுள்ளார்.
சலோமி, உலகளாவிய பதட்டங்கள் அதிகரித்து வரும் சூழ்நிலையில், உக்ரைனுடன் நடந்து வரும் போரில் மேம்பட்ட ஆயுதங்களின் பயன்பாட்டைப் பற்றி பேசுகிறார். ரஷ்யா, தனது சூப்பர்சோனிக் ஏவுகணையை ஏவுவதன் மூலம், இந்த போர் களத்தில் தொழில்நுட்பத்தின் பயன்பாட்டை உணர்த்தியுள்ளது. மேலும், மத்திய கிழக்கில் நடைபெறும் மோதல்கள் உலகளாவிய ஸ்திரத்தன்மையை பாதிக்கும் வகையில் உள்ளன.
சலோமி, தனது முன்னறிவிப்புகளை 16-ம் நூற்றாண்டில் வாழ்ந்த பிரெஞ்சு ஜோதிடர் நாஸ்ட்ராடாமஸின் தீர்க்கதரிசனங்களோடு ஒப்பிட்டுள்ளார். “வாழும் நாஸ்ட்ராடாமஸ்” என அழைக்கப்படுகிறார் சலோமி, ஏனெனில் அவர் முன்கூட்டியே பல முக்கிய நிகழ்வுகளை கணித்துள்ளார். 2024 ஆம் ஆண்டில், அவர் குறிப்பிட்ட நான்கு கணிப்புகளும் உண்மையாகிவிட்டன.
சலோமி எதிர்காலத்தில் போர்களின் உருவம் புதியது ஆகும் என்றும், சைபர்ஸ்பேஸ் மற்றும் தானியங்கி ஆயுதங்கள் மூலம் போர்கள் நடைபெறலாம் என கூறுகிறார். இந்த மாற்றம் உலகளாவிய புவிசார் அரசியலை மாற்றியமைக்கக்கூடும்.