சென்னை: சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் வரத்து அதிகரிப்பால் வெங்காயம், தக்காளி, பூண்டு விலை குறைந்துள்ளது. கடந்த வாரம் வெங்காயம் ரூ. 60 முதல் ரூ. 70-க்கும், தக்காளி ரூ. 30 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வந்தது.
மொத்த வியாபாரத்தில் வெங்காயம் ரூ. 50 கிலோ, தக்காளி ரூ. 20 மற்றும் பூண்டு ரூ. 350-க்கும் விற்பனையாகின்றன. பூண்டு விலை 50 குறைந்துள்ளது. சின்ன வெங்காயத்தின் விலை சற்று அதிகரித்துள்ள நிலையில், சில்லரை விலையில் ரூ. 100-க்கு விற்பனையாகின்றன.