மலையாளத்தில் அபர்ணா பாலமுரளி, ராஜ் பி.ஷெட்டி நடித்த ‘ருத்திரம்’ படம் கடந்த 13-ம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. பி.கே. பாபு இந்தப் படத்தில் நடிகராக அறிமுகமானார். இப்படத்தில் அவர் நடித்த ஜேசன் கதாபாத்திரமும் அவரது இயல்பான நடிப்பும் பேசப்பட்டது.
இதையடுத்து தமிழில் நடிக்கவுள்ளார். இதுபற்றி அவர் கூறும்போது, “முதல் படத்திலேயே அபர்ணா பாலமுரளி, ராஜ் பி.ஷெட்டி போன்ற நடிகர்கள் மற்றும் திறமையான டீமுடன் இணைந்து பணியாற்றுவது சிறந்த வாய்ப்பு. ரசிகர்களின் ஆதரவு மகிழ்ச்சி அளிக்கிறது. நல்ல கேரக்டர்களில் நடிக்க ஆசை. மேலும் சில சலுகைகள் வந்துள்ளன. தமிழிலிருந்தும் எனக்கு அழைப்பு வந்துள்ளது. இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும்” என்றார்.