கூடலூர்: பந்தலூரை சுற்றியுள்ள பகுதிகளில் 35-க்கும் மேற்பட்ட யானைகள் முகாமிட்டுள்ளன. இதில், ‘புல்லட்’ என்ற யானை தொடர்ந்து வீடுகளை இடித்து அரிசி உள்ளிட்ட உணவு பொருட்களை திருடி வருகிறது.
கடந்த இரண்டு மாதங்களில் 35 வீடுகளை இடித்து மனிதர்களையும் தாக்கியுள்ளது. இந்நிலையில், கடந்த வாரம் 3 நாட்களாக தொடர்ந்து வனத்துறையினர் வீடுகளை இடிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த நிலையில், இரண்டு கும்கி யானைகள் உதவியுடன் யானையை வனப்பகுதிக்குள் விரட்டும் முயற்சியில் வனத்துறையினர் 75 பேர் ஈடுபட்டனர். கும்கி யானைகளை பார்த்தவுடன் புல்லட் யானை காட்டுக்குள் பதுங்கியிருந்தது.
இதன் விளைவாக. யானை வேறு பகுதிக்கு சென்றதாக வனத்துறையினர் தெரிவித்தனர். ஆனால், அதே யானை நேற்று முன்தினம் இரவு சேரம்பாடி ‘டான்டீ’ பகுதியில் 6 வீடுகளை இடித்து சேதப்படுத்தியது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். நேற்று காலை வனத்துறையினர் மற்றும் இரண்டு கும்கி யானைகள் உதவியுடன் யானையை விரட்டும் பணி மீண்டும் நடைபெற்றது.
இந்நிலையில் அரசு தேயிலை தோட்டத்தில் 8 காட்டு யானைகளுடன் சுற்றித்திரியும் புல்லட் யானையை ஆளில்லா விமானம் மூலம் போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். மக்கள் குடியிருப்பு பகுதிக்குள் நுழைய விடாமல் தடுக்க வனத்துறையினர் முயற்சித்து வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.