ஜிஎஸ்டி கவுன்சில் சமீபத்தில் வரி விதிக்கான சில முக்கிய மாற்றங்களை அறிவித்துள்ளது. இதன் அடிப்படையில் பழைய வாகனங்களின் விற்பனை தொடர்பான விதிமுறைகளில் தெளிவுபடுத்தல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
பயன்படுத்திய கார்கள் மற்றும் எலக்ட்ரிக் வாகனங்கள் (EV) விற்பனை தொடர்பாக ஜிஎஸ்டி விதிகளை மாற்றி அமைத்துள்ளது. குறிப்பாக, வணிக நிறுவனங்கள் விற்கும் பழைய வாகனங்களுக்கு 18% ஜிஎஸ்டி விதிக்கப்படும். ஆனால், தனிநபர்கள் அவர்கள் சொந்தமாக பயன்படுத்திய வாகனங்களை விற்பது குறித்து எந்தவித ஜிஎஸ்டியும் விதிக்கப்படாது.
ஒரு நபர் 3 ஆண்டுகளுக்கு முன் 10 லட்ச ரூபாய்க்கு கார் வாங்கி இருப்பதாகக் கொள்ளுங்கள்.இன்று அவர் அதை 7 லட்ச ரூபாய்க்கு விற்பனை செய்தால், அவர் தனிநபராக இருப்பதால் எந்தவித ஜிஎஸ்டியும் கட்ட வேண்டிய அவசியம் இல்லை.ஆனால், அந்த நபர் ஒரு வாகன விற்பனையாளர் (செல்லர்) மூலமாக விற்பனை செய்தால், அந்த விற்பனையாளர் அதை 8 லட்ச ரூபாய்க்கு விற்பதன் மூலம் லாபம் அடைவார்.அந்த லாபத்தின் (1 லட்சம் ரூபாய்) மீது 18% ஜிஎஸ்டி விதிக்கப்படும். அதாவது 18,000 ரூபாய் வரி செலுத்த வேண்டும்.
பயன்படுத்திய வாகனங்களின் ஜிஎஸ்டி விதி வணிக நிறுவனங்களின் விற்பனைக்கு மட்டுமே பொருந்தும். தனிநபர்கள் அவர்கள் சொந்தமாக பயன்படுத்திய வாகனங்களை விற்பது தொடர்பாக எந்தவித வரி விதிக்கும் விதிகளும் இல்லை.
ஜிஎஸ்டி கவுன்சில் புதிய மாற்றங்களின் அடிப்படையில், மற்ற பொருட்கள் மற்றும் சேவைகளுக்கும் வரி விகிதங்களில் மாற்றங்கள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளன. ஜவுளிப் பொருட்கள், புகையிலை மற்றும் சில ஆடைகளுக்கு உயர்ந்த ஜிஎஸ்டி விகிதங்களை கொண்டு வர அரசு முடிவு செய்துள்ளது.
- ₹1,500க்கு மேல் விலையுள்ள ஜவுளிகளுக்கு 18% வரி விதிக்கப்படும்.
- புகையிலைக்கு தற்போது 28% ஆக உள்ள வரி, 35% ஆக உயர்த்தும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
இந்த மாற்றங்கள் ஜிஎஸ்டி முறையை மேலும் சரிவர கட்டமைக்க உதவுகிறது. பயனர்களும் விற்பனையாளர்களும் இதில் தெளிவாக இருக்க வேண்டும்.
இந்த புதிய விதிகள் ஜனவரி மாதம் முதல் அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், வாகனங்களின் விற்பனை மற்றும் பிற பொருட்கள் மீதான வரிவிதிக்கான மாற்றங்களை நெருக்கமாக கவனிக்குமாறு வல்லுநர்கள் பரிந்துரைக்கின்றனர்.