வங்கதேசத்தில் ஏற்பட்ட அரசுக்கு எதிரான மாணவர் புரட்சியையடுத்து, 2023 ஆகஸ்ட் மாதம் 5ஆம் தேதி ஷேக் ஹசீனா இந்தியாவுக்கு தஞ்சம் புகுந்தார். அதன்பிறகு, வங்கதேசத்தில் பொருளாதார நிபுணர் முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு அமைக்கப்பட்டது. இந்நிலையில், ஷேக் ஹசீனாவை விசாரிக்கவென அந்த அரசு திட்டமிட்டுள்ளதுடன், வங்கதேச அரசு தற்போது அவரை இந்தியாவிலிருந்து திருப்பி பெற கோரிக்கை விடுத்துள்ளது.
வங்கதேசத்தில் அந்த சமயத்தில், ஷேக் ஹசீனாவுடன் தொடர்புடைய அமைச்சர்கள், ஆலோசகர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு மனித குலம் மற்றும் இனப்படுகொலை குற்றங்களுக்கு எதிராக டாக்காவில் உள்ள சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் கைது வாரண்டுகள் பிறப்பித்தது. அதில், ஷேக் ஹசீனாவுக்கும் கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டு இருந்தது.
இந்த நிலையில், இந்தியாவில் தங்கியுள்ள ஷேக் ஹசீனாவை வங்கதேசத்திற்கு திருப்பி அனுப்ப வேண்டும் என்று வங்கதேச அரசு இந்தியாவுக்கு வாய்மொழி கோரிக்கை அளித்துள்ளது. இந்த குற்றச்சாட்டு மற்றும் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து வங்கதேச வெளியுறவு ஆலோசகர் தெரிவித்ததாவது, “நீதிமன்ற நடவடிக்கைகள் காரணமாக ஷேக் ஹசீனாவை திரும்ப வங்கதேசத்திற்கு கொண்டு வர இந்தியாவிடம் கோரிக்கை விடுத்துள்ளோம்” என்றார்.
மேலும், வங்கதேச உள்துறை ஆலோசகர் ஜஹாங்கீர் ஆலம், “வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவை நாடு திரும்ப இழுக்க இந்திய வெளியுறவு அமைச்சகத்திற்கு கடிதம் எழுதியுள்ளோம், மேலும் அந்த கடிதம் தொடர்பாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக கூறினார். டாக்கா மற்றும் டெல்லி இடையே ஏற்கனவே ஒப்படைப்பு ஒப்பந்தம் உள்ளது, அதன்படி ஷேக் ஹசீனாவை வங்கதேசம் திரும்ப பெற முடியும்” என்றார்.