குஜராத்தில் தொழில்துறை முன்னேற்றத்திற்கான திறந்தவெளி வாய்ப்புகளை தென் மாநில முதலீட்டாளர்கள் பயன்படுத்த வேண்டும் என குஜராத் தொழில்நுட்பத் துறை செயலர் மோனா கே.காந்தர் கூறினார்.
சென்னை கிண்டியில் நடைபெற்ற ‘குஜராத் தகவல் தொழில்நுட்பக் கொள்கைகள் 2022 – 2027’ கருத்தரங்கில் பேசிய அவர், குஜராத்தின் தொழில்நுட்பக் கொள்கைகள் முதலீட்டாளர்களுக்கு வெளிப்படை தன்மை மற்றும் பல சலுகைகளை வழங்குவதாக விளக்கமளித்தார்.
இந்திய உற்பத்தி 20% மற்றும் ஏற்றுமதி 33% குஜராத்திலிருந்து கிடைக்கின்றன.துறைமுக சரக்குகளின் 40% குஜராத்திலேயே கையாளப்படுகிறது.‘டீப்-டெக்’, ‘ஏஐ’, ‘செமி-கண்டக்டர்’ போன்ற தொழில்நுட்பங்களுக்கான ஆராய்ச்சி மேம்பாட்டில் முன்னுரிமை.‘ஸ்டார்ட்-அப்’ நிறுவனங்களுக்கான முழு ஆதரவு.
குஜராத் மாநில அரசு தென் மாநிலங்களின் தொழில்துறைகளுடன் இணைந்து செயல்பட விரும்புவதாக தெரிவித்தார். இதன் மூலம் வணிக வாய்ப்புகளை அதிகரிக்கவும், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டில் முன்னேறவும் முடியும்.
இந்த கருத்தரங்கில் குஜராத் தொழில்நுட்பத் துறை இயக்குநர் துஷார் பட், இந்திய வர்த்தகம் மற்றும் தொழில்நுட்ப கூட்டமைப்பின் துணை தலைவர் பூபேஷ் நாகராஜன், கிஃப்ட் சிட்டி நிதிச் சேவை மைய தலைவர் சந்தீப் ஷா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
முதலீட்டாளர்கள் குஜராத்தின் தொழில் கொள்கைகளில் ஆர்வம் காட்டுவதால் மாநிலத்தின் பொருளாதாரம் மேலும் வலுப்பெறும் என நம்பப்படுகிறது.