பிரிஸ்பேனில் நடைபெற்ற பார்டர்-கவாஸ்கர் கோப்பை 2024-25 இன் மூன்றாவது டெஸ்டுக்குப் பின், சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஷ்வின் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். அஸ்வின் தனது கிரிக்கெட் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களைப் பகிர்ந்தார்.
அதில் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரியுடன் நடந்த ஒரு உரையாடலை குறிப்பிட்டார். 2018 இல் இங்கிலாந்துக்கு சென்ற இந்திய அணியுடன் அஸ்வின் பந்து வீச்சு நுட்பங்களை வெளிப்படுத்தியதற்காக சாஸ்திரி அவரை திட்டியுள்ளார். ஆனால் அஸ்வின், தமது பந்துவீச்சு திறமையை முழுமையாக நம்பினார்
அஸ்வின் மற்றும் ரவி சாஸ்திரிக்கு இடையே பல முறை சச்சரவு ஏற்பட்டுள்ளதாகவும், இவ்வாறு பேசுவதன் மூலம் வீரர்களிடமிருந்து எதிர்பார்க்கப்பட்ட செயல்பாடுகளை பெற முடியும் என சாஸ்திரி கூறியுள்ளார்.
அஸ்வின், 41 வெளிநாட்டு டெஸ்ட் போட்டிகளில் 154 விக்கெட்டுகளை 30.05 என்ற சராசரியுடன் எடுத்துள்ளார். அவர் 1,485 ரன்களும் எடுத்து, இரண்டு சதங்களையும் அடித்தார். அஸ்வின் ஓய்வு அறிவிப்பைத் தொடர்ந்து, தனுஷ் கோட்டியன் அஸ்வினின் இடத்தை நிரப்புவதற்காக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.