ஹைதராபாத்: ‘புஷ்பா 2’ திரைப்படம் 21 நாட்களில் உலகம் முழுவதும் ரூ.1,705 கோடி வசூலித்துள்ளது என்ற அதிகாரபூர்வ அறிவிப்புடன், ரூ.1,700 கோடி வசூல் செய்தது அல்லு அர்ஜுனின் திரையுலகப் பயணத்தில் புதிய மைல்கல்லாகவும் பார்க்கப்படுகிறது. மேலும், ‘பாகுபலி 2’ படத்தின் மொத்த வசூலான ரூ.1,800 கோடியை இப்படம் முறியடிக்கும் என்ற நம்பிக்கையும் வலுத்து வருகிறது.
அல்லு அர்ஜுன் நடிப்பில் சுகுமார் இயக்கத்தில் 2021-ம் ஆண்டு வெளியான படம் ‘புஷ்பா’. இந்த படத்தின் இரண்டாம் பாகம் டிசம்பர் 5-ம் தேதி திரையரங்குகளில் வெளியிடப்பட்டது. இதில் அல்லு அர்ஜுன், ரஷ்மிகா மந்தனா, ஃபஹத் பாசில் மற்றும் பலர் நடித்துள்ளனர். தேவிஸ்ரீ பிரசாத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
இப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. சிறப்புக் காட்சி நெரிசலில் சிக்கி பெண் மரணம், அல்லு அர்ஜுன் கைது ஜாமீன், தெலுங்கானா பட அரசியல், போராட்டங்கள் என பல்வேறு பரபரப்புகளுக்கு மத்தியில் ‘புஷ்பா 2’ படத்தின் வசூல் குறையாமல் இருப்பது குறிப்பிடத்தக்கது. புதிய சாதனைகளை படைத்தது.