அஜர்பைஜான்: அஜர்பைஜான் பயணிகள் விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக ரஷ்யா மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கஜகஸ்தானில் அஜர்பைஜான் பயணிகள் விமானம் விபத்துக்குள்ளானது. 40-க்கும் மேற்பட்டோர் பலியாகிய இந்த விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், விமானத்தை ரஷ்யா சுட்டு வீழ்த்தியதாக உக்ரைன் குற்றம் சாட்டியது. இதற்கு ஆதாரமாக விமானத்தின் சில பகுதிகளில் குண்டு துளைத்த காட்சிகளை உக்ரைன் வெளியிட்டுள்ளது. உக்ரைனின் குற்றச்சாட்டை திட்டவட்டமாக மறுத்துள்ள ரஷ்யா, விசாரணை முடிவதற்குள் இதுபோன்ற அறிக்கையை வெளியிடுவது சரியல்ல என்று ரஷ்ய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதனிடையே, விமான விபத்தில் ரஷ்யாவுக்கு தொடர்பு உள்ளதா என்பது குறித்தும் நேட்டோ விசாரணையை தொடங்கியுள்ளது.