செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம், மறைமலைநகர் அருகே கொண்டங்கி கிராமத்தில் பெரிய, பழமையான ஏரி உள்ளது. இந்த ஏரியில் சுத்தமான, ஆரோக்கியமான மூலிகை நீர் அருவி போல் ஓடுகிறது. இதனால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை குடும்பத்தினர் குளித்து மகிழ்ந்த காட்சிகள் இங்கு காணப்பட்டன.
மழைக்காலம் முடிந்து தண்ணீர் வற்றிய பின் தினமும் காலை முதல் மாலை வரை 500-க்கும் மேற்பட்டோர் இங்கு வருவது வழக்கம் என அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். இங்கு வரும் பொதுமக்கள் கூறுகையில், ‘செங்கல்பட்டு மாவட்டத்தில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள 10 பெரிய ஏரிகளில் கொண்டங்கி ஏரியும் ஒன்று.
இந்த ஏரியில் குளிப்பது மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும். “ஏரி தண்ணீரில் மரங்கள், செடிகள் இல்லாமல் கண்ணாடி போல் காட்சியளிக்கிறது. எனவே இதை திறந்தால் மினி சுற்றுலா தலமாக மாறி கூட்டம் அதிகரிக்கும். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.