அஜித் நடிக்கும் தமிழ்த் திருமேனி படம் பண காரணங்களால் தாமதமாகி வருவதால், அடுத்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ‘குட் பேட் அக்லி’ படத்தில் நடித்து வருகிறார் அஜித்.
இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். தெலுங்கு சினிமாவில் முன்னணி தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்துள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு திட்டமிட்டதை விட முன்னதாகவே தொடங்கி தற்போது ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது.
ஹைதராபாத்தில் முதற்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்துள்ள நிலையில், அடுத்தகட்ட படப்பிடிப்புக்கான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா சமீபத்தில் அளித்த பேட்டியில் ‘குட் பேட் அக்லி’ படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு தென்னாப்பிரிக்காவில் நடைபெறவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
தற்போது இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யா வில்லனாக நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. வரிசையாக வில்லனாக நடித்து வரும் எஸ்.ஜே.சூர்யா தற்போது அஜித்துடன் இணையவுள்ளார் என்ற தகவல் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி.