மும்பை: மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் 1,258 புள்ளிகள் சரிந்து இன்றைய வர்த்தகம் நிறைவு பெற்றது.
மும்பை பங்குச் சந்தை குறியீடு சென்செக்ஸ் 1,258.12 புள்ளிகள் குறைந்து இன்றைய வர்த்தகம் நிறைவடைந்தது. கடந்த வெள்ளிக்கிழமை சென்செக்ஸ் 79,223.11 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது. இன்று காலை 58 புள்ளிகள் உயர்ந்து 79,281.65 புள்ளிகளில் வர்த்தகம் தொடங்கியது. இன்று குறைந்த பட்சமாக 77,781.62 புள்ளிகளிலும், அதிக பட்சமாக 79,532.67 புள்ளிகளிலும் வர்த்தகம் ஆனது.
இறுதியாக 1,258.12 புள்ளிகள் சரிந்து சென்செக்ஸ் 77964.99 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது. இந்திய பங்குச் சந்தை குறியீடு நிஃப்டியும் இன்று 388.70 புள்ளிகள் குறைந்து வர்த்தகம் நிறைவடைந்தது. கடந்த வெள்ளிக்கிழமை 24,004.75 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது.
இன்று காலை நிஃப்டி 41 புள்ளிகள் உயர்நது 24,045.80 புள்ளிகளில் வர்த்தகம் தொடங்கியது. அதிக பட்சமாக 24,089.95 புள்ளிகளிலும், குறைந்தபட்சமாக 23,551.90 புள்ளிகளிலும் வர்த்தகமானது. இறுதியாக 338.70 புள்ளிகள் வீழ்ச்சி கண்டு 23616.05 புள்ளிகளில் இன்றைய வர்த்தகம் நிறைவடைந்தது.