ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் குறித்து முடிவெடுப்பதற்காக அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் வரும் 11-ம் தேதி மாலை 3 மணிக்கு நடைபெற உள்ளது. கட்சியின் பொதுச் செயலாளர் பழனிசாமி தலைமையில் கூட்டம் நடைபெறுகிறது. 2026-ல் மீண்டும் ஆட்சிக்கு வரவும், இரட்டை இலை பிரச்னையை தீர்க்கவும் வலுவான கூட்டணி அமைக்க பல்வேறு வியூகங்களை வகுத்துள்ள பழனிசாமி, கட்சியினர் அனைவரும் கடுமையாக உழைக்குமாறு அறிவுறுத்தியுள்ளார்.
இதையடுத்து அக்கட்சியினர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், கட்சியை பலப்படுத்துவது, சட்டசபை தேர்தலுக்கு தயார்படுத்துவது, இரட்டை இலை விவகாரம் குறித்து, வரும், 11-ம் தேதி நடக்கும், அக்கட்சியின் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் ஆலோசிக்கப்படும். ஈரோடு கிழக்கு தொகுதியில் கடந்த இடைத்தேர்தலில் அ.தி.மு.க. அத்தொகுதிக்கு தற்போது அறிவிக்கப்பட்டுள்ள இடைத்தேர்தல் குறித்து இந்த கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கப்படும் என கட்சி உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.