சென்னை: அண்ணா பல்கலை. மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக தமிழக சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இதில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை பேசுகையில், அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தில் அரசின் நடவடிக்கையையும், காவல்துறையின் போக்கையும் மக்கள் பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.
வாக்கு வங்கி அரசியலுக்காக இதை அரசியலாக்குவதை ஏற்க முடியாது. பாலியல் வன்கொடுமை வழக்கு, மத்திய தொலைத்தொடர்பு அமைச்சரிடம் பேசி, தொலைபேசி எண்ணை வைத்து எளிதாக கண்டுபிடிக்கலாம். பாலியல் வன்கொடுமையை விட அதை அரசியலாக்குவது கொடுமையானது. தமிழகத்தில் மனுநீதி சோழன் ஆட்சி நடந்து வருகிறது.
அதை டிவி பார்த்து தெரிந்து கொண்ட முதல்வர் நமது முதல்வர் அல்ல. முதல்வர் மு.க. ஸ்டாலின் யார் தவறு செய்தாலும் நடவடிக்கை எடுத்து வருகிறார். அண்ணா பல்கலைக் கழக மாணவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. அண்ணா பல்கலைக் கழக விவகாரத்தில் இதுவரை முதல்வர் விளக்கம் அளிக்காதது ஏன்? என கேள்வி எழுப்பினார்.