கர்நாடக துணை முதல்வரும், நீர்ப்பாசனத்துறை அமைச்சருமான டி.கே. சிவக்குமார், மத்திய அமைச்சர் சோமண்ணாவிடம், மேல் பத்ரா திட்டத்துக்கான நிதி ஒதுக்கீடு குறித்தும், பென்னார் ஆற்றுப் படுகையில் அணை கட்ட தமிழகத்தின் எதிர்ப்பு குறித்தும் விவாதித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சிவக்குமார் கூறியதாவது:-
தென்பெண்ணை நதிநீர் பங்கீடு தொடர்பாக தமிழகம் கடந்த ஜனவரி 2-ம் தேதி பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்தது. 3 வாரங்களுக்குள் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும், ஆனால் குளிர்கால கூட்டத்தொடர் காரணமாக அது தாமதமானது. நாங்கள் நீட்டிப்பு கேட்டுள்ளோம். தமிழக-கர்நாடக பிரதிநிதிகள் பேச்சுவார்த்தை நடத்தும் தேதி இறுதி செய்யப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
தென்பெண்ணை ஆற்றின் கிளை நதியான மார்க்கண்டேய ஆற்றின் குறுக்கே அணை கட்டுவதற்கு தமிழகம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அணை கட்டுவது தொடர்பாக இரு மாநிலங்களையும் அழைத்து ஆலோசிப்பதாக மத்திய அமைச்சர் சோமண்ணா தெரிவித்துள்ளார். மேலும் தென்பெண்ணை நதிநீர் பிரச்சனைக்கு நடுவர் மன்றம் அமைத்தால் காலதாமதமாகும் என்றார்.