சென்னை: இது தொடர்பாக பிறப்பித்த உத்தரவில்; அனைத்து கிராமங்களிலும் குடியரசு தினத்தை (ஜன. 26) நடத்த வேண்டும். கிராம ஊராட்சிகளில் கிராமசபைக் கூட்டங்கள் குடியரசு தினத்தன்று 26.01.2025 அன்று காலை 11.00 மணிக்கு ஊராட்சி எல்லைக்குள்பட்ட வார்டுகளில் சுழற்சி முறையைப் பின்பற்றி நடத்தப்பட வேண்டும்.
கிராமசபை கூட்டத்தை கோரம் படி உறுப்பினர்கள் இருப்பதை உறுதி செய்த பிறகே நடத்த வேண்டும். 26.01.2025 அன்று நடைபெறும் கிராம சபைக் கூட்டத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டிய பொருட்களின் விவரம் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. தங்கள் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம பஞ்சாயத்துகளிலும், கிராம சபை கூட்டம் நடைபெறும் இடம் மற்றும் நேரம் குறித்து கிராம மக்களுக்கு தெரிவிக்க வேண்டும், இதனால் கிராம மக்கள் அனைவரும் வரவிருக்கும் கிராமசபை கூட்டத்தில் ஆர்வத்துடன் கலந்து கொள்ள முடியும்.
கிராம சபை கூட்டங்கள் எந்த மத வளாகத்திலும் நடத்தக்கூடாது. கிராமசபை கூட்டங்கள் நடைபெறும் இடத்தை கிராமப்புற பொதுமக்களுக்கு முன்கூட்டியே தெரிவிக்க வேண்டும். மேலும், 26.01.2025 அன்று நடைபெறும் கிராம சபைக் கூட்டத்தை அனைத்து கிராம ஊராட்சிகளிலும் நடத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். கூட்ட நிகழ்வுகளை நம் கிராம சபை செயலியான “நம்ம கிராம சபை மொபைல் செயலி” மூலம் உள்ளிட வேண்டும் என்றும் அது தொடர்பான அறிக்கையை 26.01.2025 அன்று அனுப்ப வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.