புதுடில்லி: மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்… சிறைத்தண்டனைக் காலத்தில் மூன்றில் ஒரு பங்கு வரை காவலில் இருந்திருந்தால், அத்தகைய கைதிகள் நீதிமன்றத்தால் பிணையில் விடுவிக்கப்படுவார்கள்.
மேலும், BNSS-ன் பிரிவு 479 (3) மேற்கூறிய விசாரணைக் கைதிகளை ஜாமினில்/பிணையில் விடுவிப்பதற்காக சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் விண்ணப்பம் செய்ய சிறை கண்காணிப்பாளருக்கு ஒரு குறிப்பிட்ட பொறுப்பை வழங்குகிறது.
இந்த விவகாரம் தொடர்பாக அக்டோபர் 16, 2024 அன்று மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு ஒரு ஆலோசனையை வெளியிட்டதாகவும், தகுதியுள்ள அனைத்து கைதிகளுக்கும் BNSS-ன் பிரிவு 479-ன் விதிகளின் பலனை வழங்கவும், அதன்படி அவர்களின் ஜாமின் விண்ணப்பங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவும் கேட்டுக் கொண்டதாகவும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.