சட்டசபையில் கேள்வி நேரத்தின் போது திரு.வி.க.நகர் தொகுதி எம்.எல்.ஏ தாயகம் கவியின் (திமுக) கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் கே.என்.நேரு, “துப்புரவுத் தொழிலாளர்களை தொழில்முனைவோராக மாற்ற தலித் இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை சபையுடன் (டிஐசிசிஐ) இணைந்து ஒரு புதிய திட்டத்தை செயல்படுத்துகிறோம்.
பணியின் போது இறந்த 39 தொழிலாளர்கள் மற்றும் அவர்களின் வாரிசுகள், 48 துப்புரவுத் தொழிலாளர்கள் மற்றும் வறுமைக் கோட்டிற்குக் கீழே உள்ள 126 ஆதி திராவிட மற்றும் பழங்குடியின மக்களுக்கு முன்னுரிமை அளித்து, அவர்களை தொழில்முனைவோராக வளர்க்க முதலமைச்சர் மூலம் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன” என்றார்.