கரூர்: கரூர் அபய பிரதான ரெங்கநாதசுவாமி ஆலயத்தில் இராப்பத்து இரண்டாம் நாள் சுவாமி திருவீதி உலாவில் வைகுண்ட நாராயணன் அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
கரூர் மேட்டு தெரு ஸ்ரீ அபய பிரதான ரெங்கநாதர் சுவாமி ஆலயத்தில் கடந்த 10.01.2025 மார்கழி மாதம் 26 ஆம் தேதி வெள்ளிக்கிழமை அதிகாலை 4 மணிக்கு வைகுண்ட ஏகாதேசியை முன்னிட்டு( பரமபத வாசல்) சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
அதைத் தொடர்ந்து நாள்தோறும் தற்போது இராப்பத்து நிகழ்ச்சி நடைபெற்று வரும் நிலையில் இன்று இரண்டாம் நாள் இராப்பத்து நிகழ்ச்சிகள் சுவாமி வைகுண்ட நாராயணன் அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார் .
ஆலய மண்டபத்தில் இருந்து மேள தாளங்கள் முழங்க அபய பிரதான ரெங்கநாதசுவாமி வைகுண்ட நாராயணன் ஆலய மண்டபத்தில் இருந்து புறப்பாடு நடைபெற்ற பிறகு ஆண்டாள் சன்னதி அருகே சுவாமிக்கு மாலை மாற்றும் நிகழ்ச்சியும், ஆஞ்சநேயருக்கு துளசி மாலை அணிவிக்கும் நிகழ்ச்சியும் நடைபெற்ற பின்னர் திருவீதி உலா நிறைவு பெற்றது.
ஆலயம் குடி புகுந்த சுவாமிக்கு மகா தீபாராதனை காட்டப்பட்டு, பக்தர்கள் அனைவருக்கும் துளசி, மஞ்சள் உள்ளிட்ட பிரசாதங்கள் வழங்கப்பட்டது.
கரூர் அபய பிரதான ரெங்கநாதர் சுவாமி ஆலயத்தில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு நடைபெற்று வரும் இராப்பத்து இரண்டாம் நாள் நிகழ்ச்சியான இன்று சுவாமி வைகுண்ட நாராயணன் அலங்காரத்தைக் காண ஏராளமான பக்தர்கள் வந்தனர்.