சென்னை: தமிழர்களின் பெருமையின் அடையாளமான ஜல்லிக்கட்டு போட்டி, பொங்கல் பண்டிகையையொட்டி நடத்தப்படுகிறது. மதுரை மாவட்டம், அவனியாபுரம், அலங்காநல்லூர், பாலமேடு ஆகிய 3 இடங்களில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டி உலகப் புகழ் பெற்றுள்ளது. கீழக்கரை கிராமம், அலங்காநல்லூர் பகுதியில் திறக்கப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு விழா ஏறுதழுவல் அரங்கம், தமிழக கலாச்சாரத்தை வெளிப்படுத்தும் பாரம்பரிய விளையாட்டுகளை பிரபலப்படுத்தவும் பாதுகாக்கவும் உருவாக்கப்பட்ட ஒரு நவீன அரங்கமாகும்.
சுற்றுலாத் துறை மூலம் பொங்கல் சுற்றுலா கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு மாவட்டத்திலும், இயற்கை சூழல் கொண்ட ஒரு கிராமம் தேர்ந்தெடுக்கப்பட்டு, மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் அந்த கிராமத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு, பாரம்பரிய வழக்கப்படி வரவேற்கப்பட்டு, அவர்களுடன் ஒன்றுகூடி, புதிய ஆடைகளை உடுத்தி, புதிய சட்டியில் பொங்கல் ஊற்றி கொண்டாடப்படுகிறார்கள்.