சென்னை: சென்னையில் தங்க நகைகளின் விலை இன்று பவுனுக்கு ரூ.200 உயர்ந்து பவுனுக்கு ரூ.58,720 க்கு விற்கப்படுகிறது. இதனால் தங்கத்தின் விலை மீண்டும் ரூ.59,000 ஐ நெருங்குகிறது. உலகில் அதிக தங்கம் வாங்கும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று. அந்த வகையில், இந்தியாவில் தங்கத்தின் விலை சர்வதேச பொருளாதார சூழ்நிலையைப் பொறுத்து தீர்மானிக்கப்படுகிறது.
5 நாட்களில் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.1000 உயர்ந்துள்ளது. பண்டிகை காலம் காரணமாக விலை உயர்வு ஏற்பட்டுள்ளது. அமெரிக்க பொருளாதார தரவுகள் வெளியாகி வருவதாலும், டிரம்ப் பதவியேற்றால் டாலர் மேலும் வலுவடையும் என்பதாலும், தங்கம் பாதுகாப்பான முதலீடாகக் கருதப்படுவதாலும் தங்கத்தின் விலை அதிகரித்து வருகிறது. கடைசியாக அக்டோபர் மாதத்தில் ஒரு பவுனுக்கு ரூ.59,640-க்கு விற்கப்பட்ட தங்கத்தின் விலை மிக அதிகமாக இருந்தது.
மேலும் தங்கத்தின் விலை மீண்டும் அதே புள்ளியை நோக்கிச் செல்கிறது என்று கூறலாம். இந்தச் சூழலில், சென்னையில் இன்று 22 காரட் தங்க நகைகளின் விலை கிராமுக்கு ரூ.25 அதிகரித்து ஒரு கிராமுக்கு ரூ.7,340 ஆகவும், பவுனுக்கு ரூ.200 அதிகரித்து ஒரு பவுனுக்கு ரூ.58,720 ஆகவும் இருந்தது. வெள்ளி ஒரு கிராமுக்கு ஒரு ரூபாய் அதிகரித்து ரூ.102 ஆக இருந்தது.